தோனியின் தனித்துவமான ஹெலிகாப்டர் ஷாட்டை பிரபல கிரிக்கெட் வீரர்கள் பலர் முயற்சி செய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
'ஹெலிகாப்டர் ஷாட்' என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவரின் ஆட்டத்தை காண்பதற்காகவே அரங்கில் ரசிகர்கள் குவிவது வழக்கம். இதைப்போல் தோனியின் தனித்துவமான ஹெலிகாப்டர் ஷாட்டை அவரின் ரசிகர்கள் மட்டுமின்றி பல முன்னணி கிரிக்கெட் வீரர்களும் வியந்து பார்ப்பார்கள். இத்தகைய புகழ்பெற்ற ஹெலிகாப்டர் ஷாட்டை பிரபல கிரிக்கெட் வீரர்கள் பலரும் முயற்சி செய்துள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
சேவாக், வி.வி.எஸ். லட்சுமண் மற்றும் பிரெட் லீ போன்ற கிரிக்கெட் வீரர்கள் இந்த முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களிடம் வரும் பந்துகளை ஹெலிகாப்டர் ஷாட் பாணியில் தடுக்க முயல்வது ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் பலர் இந்த வீடியோவை அதிகளவில் இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.