விளையாட்டு

''தோனி அவுட் இல்ல'' - கதறி அழும் சிறுவன்

''தோனி அவுட் இல்ல'' - கதறி அழும் சிறுவன்

webteam

ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் சென்னை அணி கேப்டன் தோனி அவுட் ஆனதால், ஒரு சிறுவன் கதறி அழும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஐதராபாத்தில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை அணிகள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் நேற்று களம் கண்டன. இப்போட்டியில் கடைசி பந்தில் 1 ரன் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி 4-ஆவது முறையாக மும்பை கோப்பையை வென்றது.

சிறப்பாக பந்துவீசிய பும்ரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். வெற்றி பெற்ற மும்பை அணிக்கு 20 கோடி மற்றும் கோப்பையும், 2-ம் இடம் பிடித்த சென்னைக்கு 12 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.

இதனிடையே நேற்றைய போட்டியில் கேப்டன் தோனி, ரன் அவுட் ஆனார். ஆனால் தோனியின் விக்கெட்டை உறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

பேட்ஸ்மேன்க்கு சாதகமாக முடிவு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, 3-வது நடுவர் தோனிக்கு அவுட் வழங்கினார். தோனி அவுட் ஆனதால் சிறுவன் ஒருவன் கதறி அழும் வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில், தோனி அவுட் இல்ல, தோனி அவுட் இல்ல என்று அந்த சிறுவன் கதறி அழுகிறான்.