விளையாட்டு

தோனி யாருக்காகவும் திறமையை நிரூபிக்கத் தேவையில்லை: வார்னே கருத்து

தோனி யாருக்காகவும் திறமையை நிரூபிக்கத் தேவையில்லை: வார்னே கருத்து

webteam

மகேந்திர சிங் தோனி மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே கருத்து தெரிவித்துள்ளார்.

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படும் தோனி, யாருக்காகவும் தமது திறமையை நிரூபிக்கத் தேவையில்லை என டுவிட்டரில் வார்னே பதிவிட்டுள்ளார். மகேந்திர சிங் தோனி சிறந்த கேப்டன் என்றும் வார்னே பாராட்டு தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில், புனே அணியில் இடம் பெற்றுள்ள தோனி நடப்பு சீசனில் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் சேர்த்து, 61 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். சமீப காலமாக தோனி சரியாக விளையாடுவதில்லை என கங்குலி உள்ளிட்டோர் கருத்துக்கூறிய நிலையில், தோனிக்கு ஆதரவாக வார்னே குரல் கொடுத்துள்ளார்.