விளையாட்டு

தோனியின் 3 செல்போன்கள் மாயம்

தோனியின் 3 செல்போன்கள் மாயம்

Rasus

தனது மூன்று செல்போன்கள் திருடப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி புகார் கொடுத்துள்ளதை தொடர்ந்து டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விஜய் ஹசாரே போட்டியில் பங்கேற்பதற்காக தோனி தலைமையிலான ஜார்க்கண்ட் அணியினர் கடந்த 17-ஆம் தேதி டெல்லி துவாரகா பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தனர். அந்த ஓட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதையடுத்து வீரர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் தீ விபத்து சம்பவம் நடந்த போது தன்னுடைய 3 மொபைல் திருடப்பட்டுள்ளதாக தோனி, டெல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

“ஓட்டலில் காலை நேர உணவு சாப்பிடுவதற்காக அறையில் செல்போனை வைத்துவிட்டு கீழ்தளத்திற்கு சென்றேன். அப்போது தீ விபத்து ஏற்பட்டதால் உதவியாளர்கள் என் உடைமைகளை பேக் செய்து கொடுத்தனர். அதில் 3 செல்போன்கள் இல்லை” என்று தோனி தன்னுடைய புகாரில் தெரிவித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.