விளையாட்டு

‘தோனிக்கு வயதே ஆகவில்லை; அவர் ஒரு எவர் க்ரீன் கிரிக்கெட் வீரர்’ : வாட்சன் புகழாரம்!!

‘தோனிக்கு வயதே ஆகவில்லை; அவர் ஒரு எவர் க்ரீன் கிரிக்கெட் வீரர்’ : வாட்சன் புகழாரம்!!

EllusamyKarthik

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடப்பு சீசனுக்கான ஐ.பி.எல் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ள சூழலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியை உளமார பாராட்டியுள்ளார் மற்றொரு சென்னை வீரரான ஷேன் வாட்சன்.

 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ‘தோனி ஒரு எவர்க்ரீன் கிரிக்கெட் வீரர்’ என தெரிவித்துள்ளார் வாட்சன்.

"தோனி அடுத்து வரும் நாட்களிலும் கிரிக்கெட் விளையாடவே விரும்புகிறார். அவருக்கு மேற்கொள்ளும் கடுமையான பயிற்சிகளை பார்க்கும் போது அவருக்கு வயதே ஆகவில்லை என்று தான் தோன்றுகிறது. 40 வயதானாலும் அவரால் விளையாட முடியும். நான் தோனியின் பெரிய ரசிகன். சி.எஸ்.கே அணிக்காகவோ அல்லது சர்வதேச அளவிலோ அவர் தொடர்ந்து விளையாடுவதை பார்க்கவே நான் விரும்புகிறேன்" என வாட்சன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஐ.பி.எல் சீசனிலிருந்து ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டர் வாட்சன் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.