விளையாட்டு

யாரையும் தரம் தாழ்த்தும் நோக்கில் தோனியை ஆலோசகராக நியமிக்கவில்லை : பிசிசிஐ பொருளாளர்

EllusamyKarthik

வரும் அக்டோபர் 17-ஆம் தேதி ஆரம்பமாக உள்ள ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கிப்பட்டுள்ளார் மகேந்திர சிங் தோனி. இந்நிலையில், தோனி அந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பொருளாளர் அருண் துமால். 

“தோனி ஒரு சிறந்த தலைவர். அவரது தலைமையின் கீழ் இந்தியா 2007 டி20 உலகக் கோப்பை, 2011 50 ஓவர் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி மாதிரியான முக்கிய தொடர்களை இந்தியா வென்றுள்ளது. அவரது சாதனைகள் பிரம்மிக்கத்தக்கவை. அவரை அணியின் ஆலோசகராக கொண்டிருப்பது சிறப்பானதாகும். அணியில் அவருக்குள்ள மதிப்பும், மரியாதையும் வேற லெவல். யாரையும் தரம் தாழத்தவோ, குறைத்து மதிப்பிடவோ அவரை நியமிக்கவில்லை” என தெரிவித்துள்ளார் அருண் துமால். 

அதே போல கோலியை கேப்டன் பதவியில் இருந்து விலக சொல்லி பிசிசிஐ தரப்பில் எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை. அது அவரது தன்னிச்சையான முடிவு என தெரிவித்துள்ளார்.