இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனியிடம் எத்தனை மோட்டார் சைக்கிள்கள் இருக்கின்றன என்பது குறித்து அவருக்கே தெரியாது என்று சகவீரரான ஜடேஜா கூறியுள்ளார்.
மோட்டார் சைக்கிள் பயணம் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜடேஜா, மோட்டார் சைக்கிள் பயணம் என்பது எப்போதுமே எனக்கு பயத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. என்னிடம் ஸ்போர்ட்ஸ் பைக் ஒன்று இருக்கிறது. ஆனால், அந்த பைக்கை இதுவரை நான் ஓட்டிப்பார்த்தது இல்லை. அதேநேரம் காரில் பயணிப்பது அல்லது குதிரையேற்றம் போன்றவை எனக்கு பயத்தை ஏற்படுத்தாது என்று கூறினார்.
மகேந்திரசிங் தோனியின் மோட்டார் சைக்கிள் காதல் குறித்து பேசிய ஜடேஜா, எத்தனை பைக்க்குகள் உங்களிடம் இருக்கிறது என்று தோனியிடம் ஒருமுறை கேட்டேன். உடனடியாக அவரால் பதில் கூற முடியவில்லை. சிறிது நேரம் கழித்து தன்னிடம் 43 முதல் 44 மோட்டார் சைக்கிள்கள் இருக்கலாம் என்று பதிலளித்தார். பைக்குகளைக் கையாள்வது குறித்து எனக்கு பல்வேறு ஆலோசனைகளை அவர் எனக்குக் கூறினார் என்றும் ஜடேஜா தெரிவித்தார்.