விளையாட்டு

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மேன் ஆஃப் தி மேட்ச் விருது வென்ற தோனி

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் மேன் ஆஃப் தி மேட்ச் விருது வென்ற தோனி

webteam

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் 78 ரன்கள் குவித்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தோனி பெறும் 21ஆவது ஆட்ட நாயகன் விருது இதுவாகும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய தோனியின் அரை சதத்தின் உதவியுடன் 251 ரன்கள் குவித்தது. அந்த போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.  மேலும், கடந்த அக்டோபர் 2015க்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் தோனி ஆட்டநாயகன் விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015 அக்டோபர் 15ல் இந்தூரில் நடந்த தென்னாப்பிரிக்க அணிக்கெதிரான போட்டியில் 92 ரன்கள் குவித்த தோனி, அந்த போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற முக்கியமான காரணமாக இருந்தார். 35 வயதான தோனியின் எதிர்காலம் குறித்து கேள்வியெழுப்பியவர்களுக்கு இந்த இன்னிங்ஸ் மூலம் அவர் பதிலளித்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். இதுவரை 294 போட்டிகள் விளையாடியுள்ள தோனி, ஒருநாள் போட்டிகளில் அதிக மேன் ஆஃப் தி மேட்ச் விருது வென்றவர்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் மார்க் வாக் மற்றும் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஆகியோருடன் 27ஆவது இடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். இந்த பட்டியலில் 62 மேன் ஆஃப் தி மேட்ச் விருதுகளுடன் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார்.