விளையாட்டு

இளம் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கலை வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்!

EllusamyKarthik

இளம் தொடக்க ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் வாங்கியுள்ளது. அவரது ஆடிப்பாடி விலை 2 கோடி ரூபாய். ஆனால் அவரை அந்த அணி 7.75 கோடி ரூபாய்க்கு அவரை ஏலத்தில் எடுத்துள்ளது. 29 ஐபிஎல் இன்னிங்ஸ் விளையாடியுள்ள படிக்கல் 884 ரன்கள் எடுத்துள்ளார். 

கடந்த சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்தார் படிக்கல். கடந்த 2019 முதல் 2021 வரை அந்த அணியுடன் அவர் பயணித்து வந்தார். 

இந்த ஏலத்தில் ரெய்னா, ஸ்மித் மாதிரியான அனுபவ வீரர்கள் ஏலம் போகவில்லை. அவர்களை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை.