விளையாட்டு

ரெய்னாவின் சிக்ஸரால் காயம்பட்ட சிறுவன்

ரெய்னாவின் சிக்ஸரால் காயம்பட்ட சிறுவன்

webteam

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் இந்திய வீரர் ரெய்னா அடித்த சிக்ஸரால் பந்து பட்டு சிறுவன் ஒருவன் காயமடைந்தான்.

காயமடைந்த சிறுவன் உடனடியாக கர்நாடக கிரிக்கெட் சங்க மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். சதீஷ் என்ற பெயருடைய சிறுவனுக்கு தொடைப்பகுதியில் சிறிய அளவிலான வலி ஏற்பட்டதாகவும், ஆனால் பத்து நிமிட சிகிச்சைக்குப் பின்னர் அந்த சிறுவன் மீண்டும் போட்டியைப் பார்க்கச் சென்று விட்டதாக மருத்துவர் மேத்யூ சாண்டி தெரிவித்தார். இந்த போட்டியில் 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.