டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
சாய்னா இரண்டாவது சுற்றுப் போட்டியில் தாய்லாந்தின் நிட்சோன் ஜிண்டபோலை எதிர்த்து விளையாடினார். 42 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில் 22-20, 21-13 என்ற நேர் செட்களில் சாய்னா நேவால் வெற்றி பெற்றார். காலிறுதியில் ஜப்பானின் அகானே யாமாகுச்சியை எதிர்த்து சாய்னா விளையாடவுள்ளார். ஆடவர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், இரண்டாவது சுற்று ஆட்டத்தில் தென் கொரியாவின் ஜியோன் ஹையோக் ஜின் உடன் பலப்பரீட்சை நடத்தினார். சுமார் 2 மணி நேரம் நீடித்த போட்டியில், 21-13, 8-21, 21-18 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த் போராடி வென்றார். இந்திய வீராங்கனை பிவி சிந்து தோல்வி அடைந்து வெளியேறியுள்ளார்.