விளையாட்டு

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு சாய்னா நேவால் முன்னேற்றம்

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: 2வது சுற்றுக்கு சாய்னா நேவால் முன்னேற்றம்

webteam

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நேவால் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் முதல் சுற்றுப் போட்டியில் தொடரின் ஐந்தாம் நிலை வீராங்கனையான ஸ்பெயினின் கரோலினா மரின் உடன் சாய்னா நேவால் பலப்பரீட்சை நடத்தினார். 46 நிமிடங்கள் நீடித்த போட்டியில் 22-20, 21-18 என்ற நேர் செட்களில் சாய்னா வெற்றியை வசமாக்கினார். இரண்டாவது சுற்றில் தாய்லாந்தின் நிட்சான் ஜிண்டபோலை எதிர்த்து சாய்னா நேவால் விளையாடவுள்ளார்.

டென்மார்க் ஓபன் பேட்மிண்டனின் மற்றொரு போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து முதல் சுற்றில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். உலகத் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் உள்ள சிந்து, முதல் சுற்றுப் போட்டியில் சீனாவின் சென் யுஃபே உடன் விளையாடினார். இந்தப் போட்டியில் 17-21, 21-23 என்ற செட் கணக்கில் பி.வி.சிந்து தோல்வி அடைந்து வெளியேறினார்.