விளையாட்டு

பாண்ட்யா பிரதர்ஸ் அதிரடி - 168 ரன்கள் குவித்த மும்பை அணி

webteam

டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 168 ரன்கள் குவித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 34வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய மும்பையின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் ஷர்மா மற்றும் டி காக் விக்கெட்டை பறிகொடுக்காமல் பேட்டிங் செய்தனர். அணியின் ஸ்கோர் 57 ரன்கள் இருக்கும் போது, மிஸ்ரா வீசிய பந்தில் ரோகித் ஷர்மா விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்ததாக வந்த பென் கட்டிங் 2 (4) ரன்களிலேயே நடையைக் கட்டினார். அதைத்தொடர்ந்து டி காக் 35 (27) ரன்களில் அவுட் ஆனார்.

பின்னர் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் குருனல் பாண்ட்யா மெதுவாக அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 26 (27) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரபாடா வீசிய பந்தில் சூர்யகுமார் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா மற்றும் குருனல் பாண்ட்யா அதிரடி பேட்டிங்கை தொடங்கினர். கடைசி ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 32 (15) ரன்களில் அவுட் ஆனார். இறுதி வரை விளையாடிய குருனல் பாண்ட்யா 37 (26) ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்தது. டெல்லி அணியில் சிறப்பாக பந்துவீசிய ரபாடா 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.