சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் முதல் பேட்டிங் செய்த டெல்லி அணி 147 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இடையேயான ஐபிஎல் டி20 போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிருத்வி ஷா மற்றும் ஷிகர் தவான் சீராக ரன்களை குவித்தனர். 16 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த நிலையில் பிருத்வி தனது விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து விளையாடிய தவான் 51 (47) ரன்களில் வெளியேறினார்.
அவருடன் விளையாடிய டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 18 (20) ரன்களிலும், கீப்பர் ரிஷாப் பண்ட் 25 (13) ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர். பின்னர் வந்த கோலின் இங்ரம் 2 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார். தவான், பண்ட் மற்றும் கோலின் ஆகிய மூன்று பேரின் விக்கெட்டையுமே பிராவோ வீழ்த்தி டெல்லி அணியை மிரட்டினார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது.