கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி டாஸ் வென்றது.
ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இடையே நடைபெறுகிறது. துபாய் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனால் பஞ்சாப் அணி முதலில் பந்துவீசவுள்ளது.
பஞ்சாப் அணியில் ஒரு மாற்றம் செய்யபட்டிருக்கிறது. அந்த அணியில் ஜோர்தன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ஜேம்ஸ் நீஷம் சேர்க்கப்பட்டிருக்கிறார். டெல்லி அணியில் மூன்று மாற்றங்கள் செய்யபட்டுள்ளன. அந்த அணியில் அலெக்ஸ் கரே, ரஹானே மற்றும் ஆண்ட்ரிக் நோர்ட்ஜ் ஆகியோர் இடம்பெறவில்லை. அவர்களுக்கு பதிலாக ரிஷாப் பண்ட், சிம்ரன் ஹெட்மயர் மற்றும் டேனியல் சாம்ஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.