விளையாட்டு

டெல்லி VS பஞ்சாப் மோதும் துபாய் மைதானம் எப்படி?

டெல்லி VS பஞ்சாப் மோதும் துபாய் மைதானம் எப்படி?

EllusamyKarthik

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதவுள்ள துபாய் மைதானம் எப்படி இருக்கும்? ஒரு பார்வை.

கொரோனா அச்சுறுத்தலினால் இந்த சீசனுக்கான ஐபிஎல் தொடர் அனைத்தும் ஐக்கிய அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 

அங்குள்ள அபுதாபி, ஷார்ஜா மற்றும் துபாய் விளையாட்டு மைதானங்களில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. 

அதில் துபாய் மைதானத்தில் மட்டும் மொத்தமாக 24 லீக் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. 

பொதுவாக அமீரகத்தில் உள்ள ஆடுகளங்கள் அனைத்தும் ஸ்லோ பிட்ச்களாக இருக்க துபாய் பிட்ச் மட்டும் அதற்கு விதிவிலக்காக உள்ளது. 

பேட்டிங்கிற்கு சாதகமான துபாய் மைதானத்தில் முதலில் பேட் செய்கின்ற அணி 200 ரன்களுக்கு மேல் பலமுறை ஸ்கோர் செய்துள்ளன. 

அதிகபட்சமாக இலங்கை அணியும், ஐயர்லாந்து அணியும் முதலில் பேட் செய்து  டி20 போட்டிகளில் 211 ரன்களை குவித்துள்ளன.

அதனால் பவுலர்களுக்கு பேட்ஸ்மேன்களை ரன் குவிப்பிலிருந்து கட்டுப்படுத்துவது கொஞ்சம் சிக்கல் தான். 

முதலில் பேட் செய்கின்ற அணிகள் தான்  பெரும்பாலும்  இந்த  மைதானத்தில்  வெற்றி  பெற்றுள்ளன.

அதிகபட்சமாக ஆப்கானிஸ்தான் அணி 180 ரன்களை சேஸ் செய்துள்ளது.

சராசரியாக 35 டிகிரிக்கு மேல் துபாய் மைதானத்தில் வெப்பம் வீசும். 

அதனால் டெல்லி VS பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ள போட்டியில் டாஸ் வெல்கின்ற அணி பேட்டிகை தான் தேர்வு செய்யும்.