தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் காயம் குணமடைந்து மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, ஆறு போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இப்போது விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று போட்டிகளை இந்திய அணி வென்றுள்ளது. இந்நிலையில் நான்காவது ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது.
டெஸ்ட் போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால் ஒரு கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகி இருந்த தென்னாப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் அணிக்கு திரும்பியுள்ளார். முதல் 3 ஆட்டங்களில் விளையாடாத அவர், எஞ்சிய போட்டிகளில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது வரவு உற்சாகம் அளித்திருப்பதாக அந்த அணியின் வீரர் டுமினி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து டேவிட் மில்லர் அல்லது ஸோண்டா ஆகியோரில் ஒருவர் விலக்கப்படுவார் எனத் தெரிகிறது.
இந்திய அணியில் மாற்றம் இருக்காது.