துபாயில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெற்றி பெற்றது டெல்லி அணி.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த டெல்லி அணி இருபது ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை குவித்தது.
தவான் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் டெல்லி அணிக்காக அரை சதம் கடந்திருந்தனர்.
162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு பட்லரும், ஸ்டோக்ஸும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர்.
அதிரடியாக விளையாடிய பட்லர் 9 பந்துகளில் 22 ரன்களை குவித்து வெளியேறினார்.
பென் ஸ்டோக்ஸ் 35 பந்துகளில் 41 ரன்கள் குவித்து ஆறுதல் கொடுத்தார்.
உத்தப்பா 32 ரன்களும், சஞ்சு சாம்சன் 25 ரன்களும் சேர்த்தனர்.
பின் வரிசையில் இறங்கிய பேட்ஸ்மேன்கள் செய்த தவறுகளினால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது ராஜஸ்தான்.
இருபது ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்களை குவித்து தோல்வியை தழுவியது.
இதன் மூலம் டெல்லி அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.