அபுதாபியில் நடைபெற்று வரும் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் கொல்கத்தாவிற்காக விளையாடும் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லியை அப்செட் செய்துள்ளார்.
டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த கொல்கத்தா 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்களை எடுத்தது.
தொடர்ந்து களம் இறங்கிய டெல்லி அணியின் ஆரம்பமே அதிர்ச்சிகரமாக அமைந்தது.
டெல்லி அணியின் இன்னிங்க்ஸை ஸ்டெடி செய்த பண்ட், ஷ்ரேயஸ் ஐயர் விக்கெட்டை காலி செய்தார் வருண்.
தொடர்ந்து ஹெட்மேயர், ஸ்டாய்னிஸ் மற்றும் அக்சர் பட்டேலை விக்கெட்டுகளையும் வருண் போனஸாக வீழ்த்தி கொடுத்துள்ளார்.
இந்த ஆட்டத்தில் கொல்கத்தாவிற்கு மேட்ச் வின்னராக ஜொலிக்கிறார் வருண்.
டெல்லி வருண் சுழலில் சிக்கி சின்னாபின்னமானது.