விளையாட்டு

DC VS CSK : தவான் ‘ஒன் மேன் ஷோ’ சென்னையை வீழ்த்தி டெல்லி வெற்றி

DC VS CSK : தவான் ‘ஒன் மேன் ஷோ’ சென்னையை வீழ்த்தி டெல்லி வெற்றி

EllusamyKarthik

ஷார்ஜாவில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நடப்பு ஐபிஎல் சீசனின் 34வது லீக் ஆட்டத்தில் விளையாடின.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த சென்னை இருபது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை குவித்தது.

டுப்லெஸி, வாட்சன் அமைத்துக் கொடுத்த பார்ட்னர்ஷிப்பை பயன்படுத்தி ராயுடுவும், ஜடேஜாவும் டெல்லி பவுலர்களை அப்செட் செய்தனர்.

ஜடேஜா 13 பந்துகளில் 33 ரன்களை அடித்தார். அதில் 4 சிக்ஸர்கள் அடங்கும். 

தொடர்ந்து 180 ரன்களை விரட்டிய டெல்லி அணிக்கு பிருத்வி ஷா மற்றும் ரஹானே வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்ப தவான் நிலைத்து நின்று விளையாடினார். 

ஷ்ரேயஸ் ஐயர் 23 ரன்களிலும், ஸ்டாய்னிஸ் 24 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர். 

இருபது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது டெல்லி. 

தவான் சதம் கடந்து இறுதி வரை விளையாடினார்.