விளையாட்டு

பகலிரவு டெஸ்ட் : 377 ரன் குவிப்பு - ஆஸ்திரேலியாவை மிரட்டும் இந்திய மகளிர் அணி

EllusamyKarthik

இந்திய மகளிர் அணியும், ஆஸ்திரேலிய மகளிர் அணியும் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது. 

இத்தாலியின் கர்ராராவில் செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய மகளிர் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதல் நாள் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட்டதால் இந்திய அணி ஒரு விக்கெட் 132 ரன்களுக்கு எடுத்திருந்த நிலையில் ஆட்டம் நிறுத்திக் கொள்ளப்பட்டது. ஸ்மிருதி மந்தன 80, பூனம் ராவுட் 16 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

இரண்டாவது நாளான நேற்றும் இந்திய அணி பேட்டிங் செய்தது. மழையும் குறுக்கிட்டதால் குறைவான ஓவர்களே வீசப்பட்டது. இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்திருந்தது. தீப்தி ஷர்மா 12, தனியா பட்டியா 0 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஸ்மிருதி மந்தனா 127(216) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதேபோல், பூனம் ராவட் 36 ரன்களுக்கும், கேப்டன் மித்தாலி ராஜ் 30 ரன்களுக்கும் பெவிலியன் திரும்பினர். யஸ்டிகா பாட்டியா 19 ரன்களில் அவுட் ஆனார். ஆஸ்திரேலிய தரப்பில் சோபிய் மொலினக்ஸ் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

மூன்றாவது நாளான இன்று தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 377 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. தீப்தி ஷர்மா 66 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து, ஆஸ்திரேலிய மகளிர் அணி தன்னுடைய முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது. அந்த அணி 123 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. ஹுலே 29, மெக் லன்னிங் 38, தஹிரா மெக்ரத் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பெத் மூனி 4 ரன்களை மட்டுமே எடுத்தார். இந்திய அணியில் ஜூலன் கோஸ்வாமி, பூஜா வஸ்திராகர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.