விளையாட்டு

பேட்டும் கையுமாக நிற்கும் 3 மகள்கள்... டேவிட் வார்னர் பகிர்ந்த போட்டோ

பேட்டும் கையுமாக நிற்கும் 3 மகள்கள்... டேவிட் வார்னர் பகிர்ந்த போட்டோ

EllusamyKarthik

ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னருக்கு இந்தியாவிலும் நிறையவே ரசிகர்கள் இருக்கின்றனர். வார்னரின் இந்த ரசிகர் பட்டாளத்திற்கு காரணம் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள்தான். சமீபத்தில் கூட என்னுடைய இரண்டாவது வீடு இந்தியா என்று இன்ஸ்டா போஸ்ட் ஒன்றில் வார்னர் பாசமாக பதிவிட்டிருந்தார். அவர் பதிவிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் நேரத்தை இனிதாக செலவிட்டு வரும் வார்னர் பேட்டும் கையுமாக கேமிராவுக்கு அழகாக போஸ் கொடுத்த  தனது மூன்று மகள்களின் படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 

“இதற்கு கேப்ஷன் கொடுக்கவும்” என கேப்ஷன் போட்டு தனது மகள்களின் படத்தை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். Ivy Mae, Indi Rae மற்றும் Isla Rose என வார்னரின் மூன்று மகள்களும் பேட்டோடு நிற்கின்றனர். 

ஊரடங்கு சமயத்தில் வார்னர் குடும்பத்ததுடன் இந்திய  திரை பாடல்களுக்கு நடனமாடி சமூக வலைத்தள பயனர்களுக்கு உற்சாகம் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்திய கிரிக்கெட் அணி வரும் 26 ஆம் தேதி அன்று ஆஸ்திரேலியாவுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. காயம் காரணமாக ஓய்வில் இருந்த வார்னர் இந்தப் போட்டியில் விளையாட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.