விளையாட்டு

தனுஷ் பாடலுக்கு டிக்டாக் செய்த டேவிட் வார்னர் - வைரலாகும் வீடியோ

தனுஷ் பாடலுக்கு டிக்டாக் செய்த டேவிட் வார்னர் - வைரலாகும் வீடியோ

webteam

தனுஷ் பாடிய பாடலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் டிக்டாக் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க உலக அளவில் ஆங்காங்கே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும், விளையாட்டுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கை பயன்படுத்தி கொள்ளும் வகையில் சினிமா பிரபலங்களும், விளையாட்டு பிரபலங்களும் தங்களின் ரசிகர்களோடு உரையாடுவது, வீடியோ செய்து வெளியிடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் செய்த பல்வேறு டிக்டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அத்தகைய வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து தற்போது தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலவெறி பாடலை கையில் எடுத்துள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் 2012-ம் ஆண்டு வெளியான படம் '3'. இந்தப் படத்தின் மூலமாகவே அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதில் இடம் பெற்ற 'கொலவெறி' பாடல் உலகம் முழுவதும் பிரபலமானது. அந்த பாடலுக்கு கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் டிக்டாக் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.