விளையாட்டு

100-வது போட்டியில் களமிறங்கும் வார்னர்

100-வது போட்டியில் களமிறங்கும் வார்னர்

webteam

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் டேவிட் வார்னர், தமது 100-வது ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளார். 

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான  4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் வார்னர்  களமிறங்கும் பட்சத்தில்,‌ அது அவரது 100-வது போட்டியாக அமையும். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வார்னர், நடப்புத் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் வெற்றி பெற்று தங்கள் கௌரவத்தை காக்க ஆஸ்திரேலிய அணி வீரர்கள் போராடுவார்கள் என தெரிவித்தார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 5ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. தொடரை முழுமையாக கைப்பற்றும் நோக்கில் இந்திய வீரர்கள் உள்ளனர்.