விளையாட்டு

உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ்: ஃபெடரரை வீழ்த்தினார் டேவிட் கோஃபின்

உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ்: ஃபெடரரை வீழ்த்தினார் டேவிட் கோஃபின்

webteam

லண்டனில் நடைபெறும் ஏடிபி உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடரில், பெல்ஜியம் வீரர் டேவிட் கோஃபின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். 

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளுக்கு நிகராக கருதப்படும் ஏடிபி உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் தொடர்  லண்டனில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வருடமும் ஆண்டின் இறுதியில் நடைபெறும் இந்தப்போட்டியில் தரநிலையில் டாப் 8 இடங்களில் உள்ள 8 வீரர்கள் பங்கேற்பர். இந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அரையிறுதி போட்டியில் சுவிட்சர்லாந்தை சேர்ந்த அனுபவ வீரர் ரோஜர் ஃபெடரரை எதிர்த்து பெல்ஜியத்தின் டேவிட் கோஃபின்  விளையாடினார். இதில் முதல் செட்டை ரோஜர் ஃபெடரர் 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார். அடுத்த இரண்டு செட்களில் துடிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோஃபின் 6-3, 6-4 என்ற கணக்கில் அந்த செட்களை கைப்பற்றி, இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.