விளையாட்டு

ஸ்மித்,வார்னரை அடுத்து இன்னொருவர் பதவியும் அம்பேல்

ஸ்மித்,வார்னரை அடுத்து இன்னொருவர் பதவியும் அம்பேல்

webteam

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஸ்மித், வார்னர் பதவி விலகிய நிலையில் தற்போது பயிற்சியாளர் டேரன் லீமான் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

பந்தை சேதப்படுத்திய விவகாரம் அஸி.கிரிக்கெட் அணியில் புயலை கிளப்பிக் கொண்டு இருக்கும் நிலையில், அஸி.அணியில் அடுத்தடுத்த திருப்பங்கள் தினமும் நடந்து வருகிறது. கேப்டன் மற்றும் துணை கேப்டன் பதவி பறிக்கபட்டு ஒரு ஆண்டு தண்டனையும் விதிக்கபட்டது. பேன்கிராஃப்ட்டுக்கு ஒன்பது மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பந்தை சேதப்படுத்திய விவகாரம் பயிற்சியாளர் டேரன் லீமான்-க்கு தெரியாது என்றும் அதற்கான வீடியோ ஆதாரம் இருப்பதாகவும் கூறப்பட்டது. பந்தை சேதப்படுத்திய விவகாரம் பற்றி அன்று இருந்தே பலரும் பலவிதமான கருத்துகள் சொல்லி வந்த நிலையில் பயிற்சியாளர் டேரன் லீமான் வாய் திறக்காமல் இருந்தார். இந்த நிலையில் தான் தென்னாப்ரிக்காவுக்கு எதிரான  கடைசி டெஸ்ட் போட்டி முடிந்ததும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதாக பயிற்சியாளர் டேரன் லீமான் அறிவித்துள்ளார். மேலும் வீரர்கள் பெரும் தவறு செய்துவிட்டனர். அதற்காக அவர்கள் மோசமானவர்கள் இல்லை, இதுவெல்லாம் மனித இனத்தின் ஒரு அங்கம்தான்.  தவறு இழைத்த வீரர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு கிடைக்கும் என நம்புவதாக கூறினார்