விளையாட்டு

திடீரென தாயகம் திரும்பிய ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் - என்ன காரணம்?

JustinDurai

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் குடும்ப காரணங்களால் தாயகம் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட 'பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் விளையாட உள்ளன. மூன்றாவது டெஸ்ட் இந்துாரில் மார்ச் 1ஆம் தேதி துவங்குகிறது.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் குடும்ப காரணங்களுக்காக சிட்னி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாள்களில் திரும்புவார் என்றும், இந்தூரில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட்டில் பங்கேற்பார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒருவேளை கம்மின்ஸ் மீண்டும் வராத பட்சத்தில் மூன்றாவது டெஸ்டில் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.