விளையாட்டு

அவுட் சர்ச்சை : அம்பயரை சாடிய சாக்ஷி தோனி 

அவுட் சர்ச்சை : அம்பயரை சாடிய சாக்ஷி தோனி 

EllusamyKarthik

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உடனான ஐபிஎல் தொடரின் நான்காவது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதியது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி பேட் செய்த போது, சஹார் வீசிய 18வது ஓவரின் ஐந்தாவது பந்தில் ராஸ்தானின் டாம் கரனின் பேட்டை உரசி சென்றது போல் இருந்தது. அதை கேட்ச் பிடித்த தோனி அவுட் என அப்பீல் செய்தார். 

அம்பயரும் உடனடியாக அவுட் கொடுத்துவிட்டார். இருப்பினும் அம்பயரின் முடிவை எதிர்த்து DRSக்கு அப்பீல் செய்தார். ஏற்கனவே ராஜஸ்தான் DRS ரிவ்யூவை இழந்து விட்டதால் டாம் பெவிலியனுக்கு திரும்ப வேண்டியது உறுதியானது. 

அப்போது தங்கள் முடிவை மீண்டும் மூன்றாவது அம்பயரோடு பரிசீலனை செய்த கள அம்பயர்கள் அவுட் கொடுத்ததை இல்லை என மறுத்துவிட்டனர். அதற்காக தோனியும் அம்பயர்களுடன் விவாதித்திருந்தார். 

இந்நிலையில் தல தோனியின் மனைவி சாக்ஷி ‘அவுட் என்றால் அவுட் கொடுங்கள். நீங்கள் டெக்னாலஜியை முறையாக பயன்படுத்த விரும்பியானால் அதை சரியாக செய்யுங்கள்’ என ட்விட்டரில் சாடினார். இருந்தாலும் அடுத்த சில நொடிகளிலேயே அந்த ட்வீட்டை டெலீட் செய்து விட்டார்.