விளையாட்டு

கடைசியில் சிக்ஸர் மழை பொழிந்த ஜடேஜா - டெல்லிக்கு 180 ரன் இலக்கு

கடைசியில் சிக்ஸர் மழை பொழிந்த ஜடேஜா - டெல்லிக்கு 180 ரன் இலக்கு

EllusamyKarthik

பேட்ஸ்மேன்களின் சொர்கபுரியான ஷார்ஜா மைதானத்தில் டெல்லி அணியும், சென்னை அணியும் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியின் ஓப்பனர் சாம் கர்ரன் வந்த வேகத்திலேயே டக் அவுட்டாகி பெவிலியன் திரும்ப டுப்லெஸியும், வாட்சனும் நிதானமாக ஆடினர். இருவரும் இணைந்து 87 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

பின்னர் களம் இறங்கிய ராயுடு கடைசி வரை அவுட்டாகாமல் 25 பந்துகளில் 45 ரன்களை குவித்தார்.

டுப்லெஸி 58 ரன்களில் அவுட்டானதும் கிரீஸுக்கு வந்த தோனி 3 ரன்களில் அவுட்டானார். ஜடேஜா 13 பந்துகளில் 33 ரன்களை குவித்து டெல்லி அணியின் பந்து வீச்சை பீஸ் பீஸாக்கினார்.

இருபது ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்களை சென்னை குவித்துள்ளது. இதனையடுத்து 180 ரன் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி விளையாடி வருகிறது.