இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, தனது ஜெர்சியை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பவுலர் ஹரிஸ் ராஃப்-க்கு அன்பளிப்பாக கொடுத்துள்ளார். அதில் அவரது ஆட்டோகிராப்பையும் போட்டுக் கொடுத்துள்ளார் தோனி.
அதனை ஹரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டாடியுள்ளார்.
“கிரிக்கெட் விளையாட்டின் ஜாம்பவான்களில் ஒருவரும், கேப்டன் கூலுமான தோனி எனக்கு அழகான பரிசாக அவரது ஜெர்சியை கொடுத்து சிறப்பித்துள்ளார். ‘7’ அவரது எண்ணங்கள் மூலம் பலரது மனங்களை வென்று வருகிறார்” என சொல்லி தோனி தனக்கு பரிசாக கொடுத்த ஜெர்சியை பகிர்ந்துள்ளார் ஹரிஸ்.