விளையாட்டு

தனி ஒருவராக ரன் குவித்த டூப்ளசிஸ்! பஞ்சாப் அணிக்கு 135 ரன்கள் இலக்கு

EllusamyKarthik

நடப்பு ஐபிஎல் சீசனின் 53-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசியது. 

ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டூப்ளசிஸ், சென்னை அணிக்காக தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பவர் பிளே ஓவர்கள் முடிவதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்திருந்தது சென்னை. ருதுராஜ் மற்றும் மொயின் அலி அவுட்டாகி இருந்தனர். 

தொடர்ந்து உத்தப்பா, ராயுடு, தோனி என மூவரும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 12 ஓவர்கள் முடிவில் 61 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது சென்னை. 

ஜடேஜாவுடன் இணைந்து டூப்ளசிஸ் நிதானமாக விளையாடினார். அதன் பலனாக இருவரும் 67 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டூப்ளசிஸ் 55 பந்துகளில் 76 ரன்களை எடுத்தார். நடப்பு சீசனின் 14 இன்னிங்ஸ் விளையாடி 546 ரன்களை எடுத்துள்ளார். அதன் மூலம் ஆரஞ்சு நிற தொப்பியை தற்போது வென்றுள்ளார் அவர்.  

20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 134 ரன்களை சென்னை அணி எடுத்தது. பஞ்சாப் அணிக்காக அர்ஷ்தீப் சிங், கிறிஸ் ஜோர்டன், ரவி பிஷோனி, முகமது ஷமி மாதிரியான பவுலர்கள் விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தனர். 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டுகிறது பஞ்சாப்.