விளையாட்டு

ஐ.பி.எல்.லில் விளையாடுவார்களா ருதுராஜ், தீபக் சாஹர்?

ஐ.பி.எல்.லில் விளையாடுவார்களா ருதுராஜ், தீபக் சாஹர்?

JustinDurai

காயம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் ருதுராஜ் மற்றும் தீபக் சாஹரின் உடற்தகுதி சான்றுக்கு காத்திருப்பதாக சி.எஸ்.கே தலைமை நிர்வாகி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடியபோது, ருதுராஜூக்கு கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதே போன்று தீபக் சாஹருக்கும் தொடையின் பின்பகுதியில் சதை பிடிப்பால் பாதிக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து 2 பேரும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர்களின் உடற்தகுதி சான்றுக்கு காத்திருப்பதாக சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன் பிறகே, இரண்டு பேரும் ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவது உறுதி செய்யப்படும். வரும் 26-ம் தேதி ஐ.பி.எல். போட்டி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஸ்ரேயஸ், ரிஷப் பன்ட் அபாரம்: இலங்கை வெற்றிப்பெற கடின இலக்கை நிர்ணயித்த இந்தியா