விளையாட்டு

முதல் அணியாக வெளியேறும் சிஎஸ்கே .. கெத்தாக வெற்றி பெற்ற மும்பை அணி!

முதல் அணியாக வெளியேறும் சிஎஸ்கே .. கெத்தாக வெற்றி பெற்ற மும்பை அணி!

EllusamyKarthik

ஐபிஎல் என்றாலே அதில் தோனி தலைமையிலான சென்னை  சூப்பர்  கிங்ஸ் அணியின் ஆதிக்கம் கொஞ்சம் தூக்கலாக இருக்கும்.

ஆனால் துபாயில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் சீசனில் ஆதிக்கம் செலுத்த தவறிவிட்டது சென்னை அணி.

அதனால் ஐபிஎல் களத்தில் கர்ஜிக்கும் சிங்கமாக இருந்த சிஎஸ்கே இன்று பிளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறுகிறது. 

அதிலும் இந்த சீசனில் முதல் அணியாக அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் வெளியேறுகிறது சென்னை.

இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் முதல்முறையாக ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது சிஎஸ்கே.

இளம் வீரர்கள் ஸ்பார்க் செய்யாதது, சீனியர் வீரர்களின் சொதப்பல் ஆட்டம், தொடரிலிருந்து விலகிய வீரர்களுக்கு பதிலாக அணியில் மாற்று வீரர்களை சேர்க்காதது என சிஎஸ்கே செய்த தவறுகள்  ஏராளம். அதையெல்லாம் அடுத்த சீசனில் சரி செய்து சென்னை வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டும்.

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை தோல்வியை தழுவியது. முதலில் விளையாடிய சென்னை 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது. மற்ற எல்லா வீரர்களும் சொதப்ப சாம் கர்ரன் மட்டும் 52 ரன்கள் எடுத்து சென்னை அணியின் மானத்தை காத்தார். பின்னர் விளையாடிய மும்பை அணி 12.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி அபார வெற்றி பெற்றது. அந்த அணியில் தொடக்க வீரர் இஷான் கிஷன் 37 பந்துகளில் 68 ரன்கள் விளாசினார். அதேபோல், டிக்காக் 37 பந்துகளில் 46 ரன்கள் அடித்தார்.