விளையாட்டு

அடுத்தப் போட்டியில் அம்பத்தி ராயுடு ஆடுவாரா?: சிஎஸ்கே பதில்

அடுத்தப் போட்டியில் அம்பத்தி ராயுடு ஆடுவாரா?: சிஎஸ்கே பதில்

webteam

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பத்தி ராயுடு, நாளை நடக்க இருக்கும் கிரிக்கெட் போட்டியில் விளையாட மாட்டார் என சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.

13-ஆவது ஐபிஎல் போட்டி தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிஎஸ்கே அபாரமாக விளையாடி வெற்றிப்பெற்றது. அந்தப் போட்டியில் சிஎஸ்கேவின் அம்பத்தி ராயுடு பிரமாதமாக விளையாடி 72 ரன்களை விளாசினார். அன்றையப் போட்டியில் அம்பத்தி ராயுடுவின் பங்களிப்பு சென்னை அணிக்கு வெற்றியை சாதகமாக்கியது.

இதனையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவதுப் போட்டியில் ராயுடு களமிறங்கி கலக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்தப் போட்டியில் ராயுடு காயம் காரணமாக விளையாட முடியாமல் போனது. ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே தோற்றதற்கு ராயுடு அணியில் இடம் பெறாமல் போனதும் காரணம் என கூறப்பட்டது.

இந்நிலையில் நாளை டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் ராயுடு விளையாட வாய்ப்பில்லை என சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்  தெரிவித்துள்ளோர். இது குறித்து அவர் கூறும் போது “ அவரது உடல்நிலை குறித்து கவலையடைய ஒன்றுமில்லை. அவருக்குத் தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் அடுத்து வரும் ஒரு போட்டியில் விளையாடமால் இருப்பார். ஆனால் சரியான நேரத்தில் அவர் ஆட்டத்தில் பங்கேற்க தயாராகவும் இருக்கலாம்" என்று கூறியுள்ளார்.