விளையாட்டு

சென்னை வந்தார் "தல" தோனி !

சென்னை வந்தார் "தல" தோனி !

jagadeesh

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான பயிற்சியில் ஈடுபடுவதற்கு சென்னை வந்தார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி. சென்னையில் தோனியுடன் 6 சிஎஸ்கே வீர்ரகளும் ஒருவாரம் சென்னையில் தங்கி பயிற்சி மேற்கொள்ள இருக்கின்றனர்.

இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து தோனி இன்று சென்னை புறப்பட்டார். இவர்களை தவிர சுரேஷ ரெய்னா. கரண் சர்மா, தீபக் சாஹர், பியூஷ் சாவ்லா மற்றும் மோனு குமார் ஆகியோர் சென்னையில் ஒருவாரம் பயிற்சியை மேற்கொள்ள இருக்கின்றனர். இந்தாண்டு மார்ச் 29 ஆம் தேதி நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் கொரோனா பொது முடக்கம் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் நவம்பர் 10 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையடுத்து அனைத்து அணிகளும் அதற்கான பயிற்சிகளை தொடங்க இருக்கிறது. சிஎஸ்கே அணி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு ஐபிஎல் மாதம் தொடங்குவதற்கு முன்பாகவே அதாவது ஆகஸ்ட் மாதமே துபாய் புறப்படும் என கூறப்படுகிறது.