விளையாட்டு

வருண் சுழலில் மீண்டும் போல்டான தோனி!

EllusamyKarthik

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் நடப்பு ஐபிஎல் சீசனின் 49வது லீக் ஆட்டத்தில் விளையாடின. 

173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட் நல்ல தொடக்கத்தை கொடுத்தார். 

வாட்சன் மற்றும் ராயுடுவுடன் 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தார் அவர். 

வாட்சனும், ராயுடுவும் அவுட்டானதை தொடர்ந்து சென்னையின் கேப்டன் தோனி கிரீஸுக்கு வந்தார். 

நான்கு பந்துகளில் ஒரு ரன் எடுத்த நிலையில் தோனி மீண்டும் வருண் சக்கரவர்த்தியின் சுழலில்  க்ளீன் போல்டானார். 

கொல்கத்தாவும், சென்னையும் விளையாடிய இந்த சீசனின் முதல் லீக் ஆட்டத்திலும் தோனி வருண் சுழலில் போல்டானார்.