விளையாட்டு

'விமான நிலையத்தில் மனைவி, குழந்தைகளுடன் ஒருமணிநேரம் காத்திருப்பு' -இர்பான் பதான் டென்ஷன்

JustinDurai

விமான பயணத்தில் ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார் இர்பான் பதான்.

தனக்கு விமான பயணத்தில் நடந்த மோசமான அனுபவத்தை வேதனையுடன் பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான். துபாய் பயணத்தின் போது விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானத்தில் தான் தனக்கு இப்படியொரு நிலை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார். அதாவது, "நான் புதன்கிழமை மும்பையிலிருந்து துபாய்க்கு விஸ்தாரா விமானம் UK-201 மூலம் பயணம் செய்தேன். அப்போது செக்-இன் கவுண்டரில் எனக்கு மிகவும் மோசமான அனுபவம் ஏற்பட்டது. உறுதிசெய்யப்பட்ட முன்பதிவாக இருந்த எனது டிக்கெட் வகுப்பை என்னுடைய விருப்பமின்றி டவுன்கிரேடிங் செய்தனர். இதனால் என்னுடைய மனைவி, எனது 8 மாத குழந்தை, 5 வயது குழந்தை ஆகியோருடன் சுமார் ஒருமணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

விமான ஊழியர்கள் முரட்டுத்தனமாக கடினமாக நடந்துகொண்டனர். மேலும் அவர்கள் பல சாக்குப்போக்குகள் கூறினர். என்னைப்போல் மேலும் இரண்டு பயணிகளும் இதே நிலையை அனுபவிக்க வேண்டியிருந்தது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சம்பவங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று நான் எதிர்கொண்ட அனுபவத்தை வேறு யாரும் எதிர்கொள்ள கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: திமுக மட்டும்தான் மிகவும் புத்திசாலித்தனமான, சாதுர்யமான கட்சியா? - தலைமை நீதிபதி காட்டம்