yuvaraj singh
yuvaraj singh pt web
கிரிக்கெட்

Asia Cup | "Its time to give it back mame" 23 வருஷம் கழிச்சு தரமான சம்பவம்😍 நெகிழ்ந்த யுவராஜ் சிங்!

Angeshwar G

கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி தொடங்கிய ஆசியக்கோப்பை பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி அசத்தலாக கோப்பையை தட்டிச் சென்றது.

Siraj

இறுதிப் போட்டியில் அசத்தலாக பந்துவீசிய சிராஜ் ஒரே ஓவரில் 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த இலங்கை அணி 50 ரன்களை மட்டுமே எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 6.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக முகம்மது சிராஜ், தொடர் நாயகனாக குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ரசிகர்கள் 2000 ஆம் ஆண்டு கோகோ கோலா சாம்பியன்ஸ் ட்ராபி இறுதிப் போட்டியை நினைவு கூர்ந்து "Its time to give it back mame" என கொண்டாடி வருகின்றனர். இந்தியா - இலங்கை அணிகள் மோதிய அந்த இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை அணி, ஜெயசூர்யாவின் அபாரமான ஆட்டத்தால் 5 விக்கெட்களை இழந்து 299 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக ஜெயசூர்யா 189 ரன்களை எடுத்தார். பின் களமிறங்கிய இந்திய அணி 54 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சமிதா வாஸ் 5 விக்கெட்களையும் முரளிதரன் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்திய அணியின் குறைந்தபட்ச ஸ்கோராக இதுவே உள்ளது.

ரசிகர்கள் நேற்றைய போட்டியையும் 2000 ஆவது ஆண்டில் நடந்த போட்டியையும் ஒப்பிட்டு கொண்டாடி வருகின்றனர். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் X வலைதளத்தில், “இறுதியாக நம் முதுகில் இருந்த பாரம் இறங்கியுள்ளது. 23 ஆண்டுகளுக்கு முன் இந்திய அணி இலங்கைக்கு எதிரான போட்டியில் 54 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆசியக் கோப்பையில் ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர்களுக்கு வாழ்த்துகள். உலகக் கோப்பை தொடர் முழுவதும் இதே ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்து நெகிழ்ந்துள்ளார்.