Yuvraj singh
Yuvraj singh pt desk
கிரிக்கெட்

சோதனையிலும் சாதனை படைத்த வெற்றி நாயகன் யுவராஜ் சிங்!

webteam

யுவராஜ் சிங்கின் இந்த கொண்டாட்டம் 2011 உலகக் கோப்பையை வென்றபோது அல்ல, காலிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய போது... ஆம் இருக்கதானே செய்யும், ஹாட்ரிக் சாம்பியனை வீழ்த்துவது என்றால் சாதாரணமானதா என்ன? இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார் ஆல்ரவுண்டர் யுவராஜ். பந்து வீச்சில் 2 விக்கெட்களுடன், 57 ரன்கள் எடுத்து வெற்றியை தேடித் தந்தார்.

Yuvraj Singh

அத்தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை இந்திய அணிக்கு கொடுத்த யுவராஜ் சிங், உலகக் கோப்பையுடன், தொடர் நாயகன் விருதையும் பெற்று உலகின் சிறந்த ஆல்ரவுண்டர் தான் என நிரூபித்தார். இப்படி யுவராஜ் சிங்கின் வெற்றி பக்கம் இருக்க, மறுபக்கம் புற்றுநோய், அவரை உள்ளுக்குள் இருந்து கொலையாக கொன்று கொண்டிருந்தது. 2011 உலகக் கோப்பையின் போதும் அவருக்கு புற்று நோயின் கோரமான வலி இருந்தது என்பது பின்னரே அனைவரும் அறிந்தனர்.

புற்றுநோயை குணப்படுத்த முடியாது என்பதே பலரின் நினைப்பாக இருக்கும் பட்சத்தில், உரிய சிகிச்சையுடன் மன வலிமையோடு இருந்தால் எதனையும் வெற்றி கொள்ளலாம் என நிரூபித்தார் யுவராஜ் சிங். அத்துடன் நிறுத்தாமல் மீண்டும் கிரிக்கெட் விளையாடி ஒவ்வொரு இளைஞரின் முன்னோடியாகவும் திகழ்ந்தார். டி20 உலகக் கோப்பை தொடரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசினார். 12 பந்துகளில் அரை சதம் விளாசினார்.

yuvraj

அணி எப்போதெல்லாம் சரிவை சந்திக்கிறதோ, அப்போதெல்லாம் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார் யுவராஜ் சிங் என்றால் அது மிகையில்லை. கேன்சர் என்ற கொடிய நோயை வென்றதோடு, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் 28 ஆண்டு கால ஏக்கத்தை போக்க உலகக் கோப்பையை வென்று கொடுத்த பெருமை யுவராஜுக்கு உண்டு. வேதனைகளை வென்ற சாதனை நாயகன் நமது UNSUNG யுவராஜ் சிங்.

- புதிய தலைமுறைக்காக செல்வக்கண்ணன்