Quinton de Kock
Quinton de Kock pt desk
கிரிக்கெட்

SAvsPAK | முதலிடத்தைக் குறிவைக்கும் தென்னாப்பிரிக்கா; அரையிறுதி வாய்ப்பில் நீடிக்குமா பாகிஸ்தான்?

Viyan

போட்டி 26: பாகிஸ்தான் vs தென்னாப்பிரிக்கா

மைதானம்: என் ஏ சிதம்பரம் ஸ்டேடியம், சேப்பாக்கம், சென்னை

போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 27, மதியம் 2 மணி

2023 உலகக் கோப்பையில் இதுவரை:

பாகிஸ்தான்

போட்டிகள்: 5, வெற்றிகள் - 2, தோல்விகள் - 3, புள்ளிகள் - 4

சிறந்த பேட்ஸ்மேன்: முகமது ரிஸ்வான் - 302 ரன்கள்

சிறந்த பௌலர்: ஷஹீன் அஃப்ரிடி - 10 விக்கெட்டுகள்

south africa

முதலிரு போட்டிகளில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகளைத் தோற்கடித்து நல்ல முறையில் உலகக் கோப்பையை தொடங்கியது பாகிஸ்தான். ஆனால் இந்தியாவுக்கு எதிரான தோல்வி அவர்கள் பாதையை அப்படியே புரட்டிப் போட்டுவிட்டது. அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகத் தோற்றவர்கள், கடைசிப் போட்டியில் ஆப்கானிஸ்தானிடமும் அதிர்ச்சித் தோல்வி அடைந்திருக்கிறார்கள்.

தென்னாப்பிரிக்கா

போட்டிகள்: 5, வெற்றிகள் - 4, தோல்வி - 1, புள்ளிகள் - 8

சிறந்த பேட்ஸ்மேன்: குவின்டன் டி காக் - 407 ரன்கள்

சிறந்த பௌலர்: ககிஸோ ரபாடா - 10 விக்கெட்டுகள்

south africa

இந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்க அணியின் தாரக மந்திரம் ஒன்றுதான் - 'முதலில் பேட்டிங் பிடி, முரட்டுத்தனமாக அடி, அந்த ஸ்கோர்போர்ட் நெருக்கடியில் எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்து'.

இதை மிகச் சிறப்பாக செய்துகொண்டிருக்கிறது அந்த அணி. இலங்கை, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் அந்த பிளானில்தான் மாட்டிக்கொண்டன. அவர்கள் சேஸ் செய்த ஒரேயொரு போட்டியிலும் நெதர்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது தென்னாப்பிரிக்கா.

மைதானம் எப்படி?

சேப்பாக்கம் மைதானம் வழக்கமாக ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருக்கும். வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் ஓரளவு ஒத்துழைப்பு கொடுக்கும். ஆனால் இதற்கு முன் நடந்த ஆப்கானிஸ்தான் vs பாகிஸ்தான் போட்டியில் பேட்டிங் செய்ய நன்றாகவே ஒத்துழைத்தது. அது அனைவருக்கும் பெரிய ஆச்சர்யமாக இருந்தது. அதனால் அப்படியொரு ஷாக்கை இந்தப் போட்டியிலும் சேப்பாக்கம் வழங்கலாம்.

Pakistan

அரையிறுதி வாய்ப்பில் நீடிக்குமா பாகிஸ்தான்?

பாகிஸ்தான் அணி இந்த உலகக் கோப்பையில் அனைத்து ஏரியாக்களிலும் சுமாராகவே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. பேட்டிங்கில் டாப் ஆர்டர் தடுமாறுகிறது. பந்துவீச்சோ முழுக்க முழுக்க ஷஹீன் அப்ரிடியை மட்டுமே நம்பியிருக்கிறது. ஃபீல்டிங் என்பது அமெச்சூர் கிரிக்கெட்டை விட படுமோசமாக இருக்கிறது. அந்த அணியை ஒருங்கிணைக்கூடியவராக கேப்டன் பாபர் ஆசம் தெரியவில்லை. சிறந்த வீரர்கள் இருந்தாலும், ஒரு உலகக் கோப்பையை வெல்லக்கூடிய அணியாக இந்த பாகிஸ்தான் தெரியவில்லை.

இப்படிப்பட்ட ஒரு நிலையில் உச்சபட்ச ஃபார்மில் இருக்கும் தென்னாப்பிரிக்காவை சந்திக்கிறது பாகிஸ்தான். தென்னாப்பிரிக்க அணிக்கு இருக்கும் ஒரே வீக்னஸ் அவர்கள் ஸ்பின்னுக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடியவர்கள் அல்ல. அதை நன்கு பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஆட்டம் சேப்பாக்கத்தில் நடக்கிறது. ஆனால் பாகிஸ்தான் ஸ்பின்னர்கள் அதைப் பயன்படுத்திக்கொள்வார்களா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி. 96.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருக்கிறார்கள் பாகிஸ்தான் ஸ்பின்னர்கள். இந்த மோசமான ஸ்டேட் இந்தப் போட்டியில் மாறவில்லை என்றால் பாகிஸ்தான் அணி அரையிறுதி வாய்ப்பை மீண்டும் மறக்கவேண்டியதுதான்.

முதலிடத்துக்கு முன்னேறுமா தென்னாப்பிரிக்கா?

தென்னாப்பிரிக்க அணியின் பேட்டிங்கைப் பார்த்தால் யாருக்குமே மெர்சலாகும். அந்த அளவுக்கு இந்த உலகக் கோப்பையில் பட்டையைக் கிளப்பிக்கொண்டிருக்கிறது அந்த அணி. முதலில் பேட்டிங் செய்த 4 போட்டிகளிலும் 300+ ஸ்கோரை பதிவு செய்திருக்கிறது. தென்னாப்பிரிக்கா சார்பில் இதுவரை 5 போட்டிகளில் 5 சதங்கள் அடிக்கப்பட்டிருக்கின்றன. களமிறங்கும் ஒவ்வொரு பேட்ஸ்மேனுமே பௌண்டரி மழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.

Pakistan

குவின்டன் டி காக் மூன்று சதங்கள் அடித்து இந்த உலகக் கோப்பையின் டால் ரன் ஸ்கோரராகத் திகழ்கிறார். இந்த பலமான பேட்டிங், சுமாரான பௌலிங்குக்கு பலம் சேர்க்கிறது. பெரும் நெருக்கடியோடு களமிறங்கும் எதிரணிகளின் விக்கெட்டுகளை தென்னாப்பிரிக்க வேகங்கள் அறுவடை செய்துகொண்டிருக்கிறார்கள். ரபாடா, கொட்சியா, யான்சன் அனைவரும் தலா 10 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்கள். முதலில் பந்துவீசும்போது, எதிரணி ஸ்கோர் போர்ட் நெருக்கடி இல்லாமல் ஆடினால், அது தென்னாப்பிரிக்க பௌலிங்குக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கும்.

கவனிக்கப்படவேண்டிய வீரர்கள்

பாகிஸ்தான் - ஷஹீன் அஃப்ரிடி: பாகிஸ்தான் பந்துவீச்சின் ஒரே நம்பிக்கையாகத் திகழும் ஷஹீன் பவர்பிளேவில் பெரிய மேஜிக் நிகழ்த்தினால் தான் தென்னாப்பிரிக்க அணியை கட்டுப்படுத்த முடியும்.

south africa

தென்னாப்பிரிக்கா - ஹெய்ன்ரிச் கிளாசன்: வங்கதேசத்துக்கு எதிராக டி காக் உடன் இணைந்து சிக்ஸர் மழை பொழிந்தார் கிளாசன். ஒருவேளை பாகிஸ்தான் ஸ்பின்னர்கள் சேப்பாக்க ஆடுகளத்தைப் பயன்படுத்திக்கொண்டாலும், மிகச் சிறப்பாக கையாளும் கிளாசனை சமாளிக்கு புது திட்டங்கள் இருந்தால் மட்டுமே முடியும்.