icc womens wc  x page
கிரிக்கெட்

மகளிர் உலகக்கோப்பை.. டிக்கெட் விலை ரூ.100.. ஐசிசி அறிவிப்பு!

நடப்பாண்டிற்கான மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியாவில் நடைபெறும் முதற்கட்ட லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விலை, வெறும் 100 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Prakash J

நடப்பாண்டிற்கான மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியாவில் நடைபெறும் முதற்கட்ட லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விலை, வெறும் 100 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆண்கள் கிரிக்கெட் அணியைப் போன்றே பெண்கள் கிரிக்கெட் அணியும் வடிவமைக்கப்பட்டு, ஐசிசி உலகக்கோப்பை தொடர்களை நடத்திவருகிறது. அந்த வகையில், அடுத்த மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் மகளிர் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. அதிலும், ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்குத் திரும்பியுள்ளது. இந்தப் போட்டி இலங்கையின் கொழும்புவுடன் சேர்த்து குவஹாத்தி, இந்தூர், விசாகப்பட்டினம் மற்றும் நவி மும்பை ஆகிய நான்கு இந்திய நகரங்களில் நடைபெற உள்ளது.

இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 8 அணிகள் மோதுகின்றன. இந்த நிலையில், நடப்பாண்டிற்கான மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியாவில் நடைபெறும் முதற்கட்ட லீக் போட்டிகளுக்கான டிக்கெட் விலை, வெறும் 100 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மைதானங்கள் முழுமையாக நிரம்புவதற்காகவும், மகளிர் கிரிக்கெட் போட்டிகளின் வளர்ச்சிக்காகவும், மிக குறைந்த விலையில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.