தீப்தி சர்மா cricinfo
கிரிக்கெட்

T20 WC| அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்குமா இந்தியா..? தென்னாப்பிரிக்காவிற்கு 159 ரன்கள் இலக்கு!

மகளிர் டி20 உலகக்கோப்பையில் அரையிறுதியை உறுதிசெய்யக்கூடிய முக்கியமான போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டு விளையாடிவருகிறது இந்திய மகளிர் அணி.

Rishan Vengai

பாகிஸ்தான், நெதர்லாந்து அணிகளை வீழ்த்தி வலுவாக இருக்கும் இந்தியா, அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய தென்னாப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவை கட்டாயம் வீழ்த்த வேண்டிய சூழலில் உள்ளது. ஆஸ்திரேலியாவின் வலிமையை கருத்தில் கொண்டு, இன்றைய தென்னாப்பிரிக்கா மோதல் முக்கியமாக மாறியுள்ளது. ஷபாலி வெர்மா தொடக்கத்தில் வேகமாக ரன்கள் சேர்த்த நிலையில், இந்தியா 158 ரன்கள் எடுத்தது; தென்னாப்பிரிக்கா 159 ரன்கள் இலக்கை நோக்கி போராடுகிறது.

2026 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் பரபரப்பாக நடந்துவரும் நிலையில், பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றுள்ள இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. ஆனால் மீதமிருக்கும் 3 போட்டிகளில் இரண்டில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள வேண்டும் என்பதால், தென்னாப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியா இரண்டில் ஒரு அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது.

ஹர்மன்ப்ரீத் கவுர்

ஆஸ்திரேலியா தலைசிறந்த அணியாக விளங்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிரான ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் செல்லலாம் என்பதால், தென்னாப்பிரிக்காவை கட்டாயம் வீழ்த்த வேண்டிய நிலையில் இன்று எதிர்கொண்டு விளையாடிவருகிறது இந்திய அணி.

பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய ஷபாலி வெர்மா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவர்பிளேவில் 60 ரன்களுக்கு அழைத்துச்சென்றார். ஆனால் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்த இந்தியா தடுமாறிய நிலையில், மூத்த வீரர்களான ஹர்மன்ப்ரீத் மற்றும் தீப்தி சர்மா இருவரும் சேர்ந்து அணிக்காக போராடினர்.

தீப்தி சர்மா 29 ரன்களும், ஹர்மன்ப்ரீத் 24 ரன்களும், ரிச்சா கோஸ் 15 ரன்களும் அடிக்க 20 ஓவர் முடிவில் இந்திய அணி 158 ரன்கள் சேர்த்துள்ளது.

159 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிவரும் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை இழந்து விளையாடிவருகிறது.