south africa vs bangladesh icc
கிரிக்கெட்

தென்னாப்பிரிக்கா மண்ணில் சாதிக்குமா வங்கதேசம்.. இன்று கடைசி நாள் ஆட்டம்!

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 400 ரன்கள் அடித்து போராடிய வங்கதேச அணி, தோல்வியை தவிர்க்க இன்று கடைசி நாள் ஆட்டத்தில் விளையாடுகிறது.

Rishan Vengai

தென்னாப்பிரிக்காவில் நடந்த 8 டெஸ்ட் போட்டிகளில் தோற்ற வங்கதேசம், முதல் டிராவை எடுப்பதற்கான வாய்ப்பை எதிர்நோக்குகிறது. கடைசி நாள் ஆட்டத்தில் லிட்டன் தாஸ் நீடிப்பதால், வங்கதேச அணியின் போராட்டம் ரசிகர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்றுள்ளது.

முதலில் டெஸ்ட் தொடர் தொடங்கியிருக்கும் நிலையில், இரண்டு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பரபரப்பாக நடைபெற்றுவருகிறது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 2 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தாலும் டோவிட் ஹ்ரிடோயின் 137 ரன்கள், லிட்டன் தாஸின் 120 ரன்கள் என்ற அடுத்தடுத்து 2 சதங்களால் முதல் இன்னிங்ஸில் 400 ரன்கள் குவித்து அசத்தியது.

தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா அணி 5 ரன்னுக்கு 1 விக்கெட்டை இழந்தபிறகு 2வது இன்னிங்ஸுக்கு 200 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு மிரட்டியது. மார்கஸ் அக்கர்மென்னின் 157 ரன்கள், ரியான் ரிக்கல்டனின் 102 ரன்கள் ஆட்டத்தால் 557 ரன்கள் குவித்தது தென்னாப்பிரிக்கா அணி.

157 ரன்கள் தென்னாப்பிரிக்கா முன்னிலை பெற்ற நிலையில், 2வது இன்னிங்ஸில் விளையாடிவரும் வங்கதேச அணி 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 100 ரன்னுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கவிருக்கும் நிலையில் வங்கதேச அணி ஆட்டத்தை சமன்செய்யுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுவரை தென்னாப்பிரிக்காவில் நடந்த 8 டெஸ்ட் போட்டிகளிலும் வங்கதேச அணி தோற்றிருக்கும் நிலையில், முதல் டிராவை எடுத்துவருமா என்ற எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. களத்தில் லிட்டன் தாஸ் நீடிப்பதால் வங்கதேச அணி போராடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.