ஜான் கெம்ப்பெல் cricinfo
கிரிக்கெட்

IND vs WI TEST| 19 ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் வீரர் சதம்.. ஜான் கெம்ப்பெல் படைத்த சாதனை!

19 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு எதிராக சதமடித்த முதல் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஜான் கெம்ப்பெல்..

Rishan Vengai

19 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிற்கு எதிராக சதமடித்த முதல் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் ஜான் கெம்ப்பெல்..

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் கேஎல் ராகுல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா 3 பேரும் சதமடித்து அசத்தினர். அந்தப்போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

ஜடேஜா

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், இந்திய அணி 518 ரன்கள் குவித்து அசத்தியது. முதல் இன்னிங்ஸில் வெறும் 248 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் சுருண்ட நிலையில், தொடர்ந்து ஃபால்லோ ஆன் செய்து விளையாடிவருகிறது.

19 ஆண்டுகளுக்கு பிறகு சதம்..

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜான் கெம்ப்பெல் 12 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் உடன் தன்னுடைய முதல் டெஸ்ட் சதத்தை பதிவுசெய்து அசத்தினார்.

ஜான் கெம்ப்பெல்

இதனமூலம் இந்தியாவிற்கு எதிராக 19 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் சதமடித்த முதல் வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர் என்ற பிரத்யேக சாதனையை படைத்தார் ஜான் கெம்ப்பெல். கடைசியாக கடைசியாக 2006-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் தொடக்க வீரர் டேரன் கங்கா இந்தியாவிற்கு எதிராக சதமடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஷாய் ஹோப்

ஜான் கெம்ப்பெல் 115 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஷாய் ஹோப் தன்னுடைய 3வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். 103 ரன்கள் அடித்தபோது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ஷாய் ஹோப்.