மேற்கிந்திய தீவுகள் அணி, ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடுவதற்காக அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. 2 போட்டிகளில் வென்று முன்னிலை வகித்த மேற்கிந்திய தீவுகள் அணி, வாஷ் அவுட் செய்யும் முறையில் 3-வது ஒருநாள் போட்டியை எதிர்கொண்டது. சார்ஷா மைதானத்தில் நடந்த இந்த கடைசிப் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணி, ஐக்கிய அரபு அமீரக அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது.
இந்தத் தொடரின் 3-வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் கெவின் சின்க்ளேர், 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி ஆட்ட நாயகன் விருதுபெற்றார்.
இந்நிலையில், முதல் இன்னிங்சின்போது ஐக்கிய அரபு அமீரக அணியின், ரமீஸ் ஷாஜத் மற்றும் விக்கெட் கீப்பர் விருட்டியா அரவிந்த் விக்கெட்டுகளை கைப்பற்றியபோது மைதானத்திலேயே அந்தரத்தில் குட்டிக்கரணம் (somersault) அடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.