wbbl x page
கிரிக்கெட்

WBBL|3 ரன்கள் எடுத்தால் வெற்றி.. மழை நின்றபோதும் போட்டியை நிறுத்திய நடுவர்கள்.. வெடித்த சர்ச்சை!

நடப்பாண்டுக்கான பெண்கள் பிக்பாஷ் லீக் தொடரில், இன்று நடைபெற்ற ஒரு போட்டியில், மழை பெய்யாத போதும் ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தது அணி வீராங்கனைகளையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

Prakash J

நடப்பாண்டுக்கான பெண்கள் பிக்பாஷ் லீக் தொடரில், இன்று நடைபெற்ற ஒரு போட்டியில், மழை பெய்யாத போதும் ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தது அணி வீராங்கனைகளையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இந்தியாவில் ஐ.பி.எல் மற்றும் டபிள்யூ.பி.எல் தொடர்கள் நடைபெறுவதுபோல ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் லீக் (ஆண்கள் மற்றும் பெண்கள்) தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நடப்பாண்டுக்கான பெண்கள் பிக்பாஷ் லீக் தொடரின் 11வது சீசன் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஒரு போட்டியில், மழை பெய்யாத போதும் ஆட்டம் கைவிடப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தது அணி வீராங்கனைகளையும் ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. அடிலெய்டு ஓவலில் இன்று நடைபெற்ற போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் சிட்னி தண்டர் ஆகிய அணிகள் மோதின. போட்டியின்போது மழை பெய்ததால் ஆட்டம் 5 ஓவர் கொண்டதாக அறிவிக்கப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த ஸ்டைக்கர்ஸ் அனி 5 ஓவரில் 46 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய தண்டர் அணி 2.5 ஓவரில் 43 ரன்கள் எடுத்திருந்தது. இன்னும் 13 பந்தில் வெறும் 3 ரன்களே தேவைப்பட்டது.

அப்போது மழை குறுக்கிட்டது. இதனையடுத்து சிறிது நேரத்தில் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஆனால் ஆட்டத்தை நடுவர்கள் நிறுத்தி வைத்தனர். இருப்பினும் களத்தில் இருந்த இரு நடுவர்களும் போட்டி கைவிடப்பட்டதாக அறிவித்தனர். இதனை சற்று எதிர்பாரத தண்டர் அணி வீராங்கனைகள் கோபத்துடன் மைதானத்தில் இருந்து வெளியேறினர். மேலும் வெளியில் இருந்த மற்ற வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் என பலரும் இந்த முடிவால் அதிர்ச்சியடைந்தனர். புள்ளிகள் பட்டியலில் ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் இருக்கும் இரு அணிகளும் வெற்றிக்காக தீவிரமாக காத்திருந்த நிலையில், இந்த முடிவை நடுவர்கள் வேண்டும் என்றே அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.