விராட் கோலி எக்ஸ் தளம்
கிரிக்கெட்

ஓய்வா.. விலகலா? விராட் கோலியின் RCB நிலைகுறித்து அணி சி.இ.ஓ. பதில்!

அந்தத் தொடரில் 16 இன்னிங்ஸ்களில் 165.85 ஸ்டிரைக் ரேட்டில் 675 ரன்கள் குவித்து, அணியின் முன்னணி ரன் குவித்த வீரராக திகழ்ந்தார்.

Prakash J

விராட் கோலி தனது சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டதால், அவரது ஐபிஎல் ஓய்வு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு அவ்வணியின் சி.இ.ஓ. பதிலளித்துள்ளார்.

இந்தியாவின் ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, சர்வதேசப் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடர்களில் எண்ணற்ற சாதனைகளைப் படைத்துள்ளார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரில், பெங்களூரு அணி மீண்டும் சாம்பியன் ஆக முக்கியப் பங்கு வகித்தார். அந்தத் தொடரில் 16 இன்னிங்ஸ்களில் 165.85 ஸ்டிரைக் ரேட்டில் 675 ரன்கள் குவித்து, அணியின் முன்னணி ரன் குவித்த வீரராக திகழ்ந்தார். ஏற்கெனவே அவர், டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற அவர், தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். எனினும், அவர் காயம் காரணமாக தற்போது நடைபெற்று வரும் ஆப்கான் தொடரிலிருந்து விலகியுள்ளார். இந்த நிலையில், விராட் கோலி தனது சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்டதால், அவரது ஐபிஎல் ஓய்வு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் மேனன், விராட் கோலி, இன்னும் குறைந்தபட்சம் நான்கு சீசன்களுக்குத் தொடர்ந்து விளையாடுவார்” என்று ராஜேஷ் மேனன் உறுதிப்படுத்தியுள்ளார்.

விராட் கோலி

இதுகுறித்து அவர், “ஆர்சிபி மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஒரே நாணயத்தின் இருபக்கங்கள் போன்றவர்கள். ஆரம்பம் முதலே ஆர்சிபி அணியின் முக்கியத் தூணாக அவர் இருந்து வருகிறார். கிரிக்கெட் விளையாட்டிலிருந்து அவர் ஓய்வு பெற்றாலும், ஆர்சிபி அணியில் அவரது பங்களிப்பு தொடரும். அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு அவர் நிச்சயமாக விளையாடுவார் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை. அவர் முழு உடற்தகுதியுடன் இருக்கிறார், அவரது ரன் வேட்கை ஒருபோதும் குறைவதில்லை. இந்த ஐபிஎல் சீசனில் அவரது ஆற்றல், ரன்கள் குவிப்பு மற்றும் ஆட்டத்தின் மீதான அணுகுமுறை என அனைத்தையும் நாம் பார்த்தோம். எனவே, அடுத்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளுக்கு விளையாடுவதில் அவருக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை" என்று மேனன் தெரிவித்துள்ளார்.