virat kohli records 2023
virat kohli records 2023 X
கிரிக்கெட்

Rewind 2023 : 7000 ரன்கள், 50 சதங்கள், 308 வெற்றிகள்! 5 முறியடிக்க முடியாத சாதனைகள் படைத்த கோலி!

Rishan Vengai

இந்தியாவிற்காக அதிகவெற்றிகளில் பங்கேற்ற முதல் வீரர்!

virat kohli

இந்தியாவிற்காக 574 சர்வதேச போட்டிகளில் விளையாடியிருக்கும் விராட் கோலி, இந்திய அணிக்காக அதிக வெற்றிகளில் பங்கேற்ற வீரர் என்ற சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் 307 இந்திய அணியின் வெற்றிகளில் பங்கேற்ற வீரராக இருந்த நிலையில், 308 வெற்றிகளில் பங்கேற்றுள்ள விராட் கோலி புதிய சாதனையை படைத்து அசத்தியுள்ளார். இந்த வருடம் 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் இலங்கை அணிக்குஎதிராக பெற்ற வெற்றியின்போது இந்த சாதனையை விராட் கோலி படைத்தார்.

குறைவான போட்டிகளில் 13000 ரன்கள்!

virat kohli

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் குறைவான இன்னிங்ஸ்களில் விளையாடி 13000 ஒருநாள் ரன்களை எட்டிய முதல் சர்வதேச வீரர் என்ற இமாலய சாதனையை விராட் கோலி 2023-ல் படைத்தார். ஏற்கெனவே 321 இன்னிங்ஸ்களில் சச்சின் டெண்டுல்கர் படைத்திருந்த உலக சாதனையை, 267 இன்னிங்ஸ்களில் எட்டி முறியடித்துள்ளார் விராட் கோலி.

50 ஒருநாள் சதங்கள் அடித்த முதல் வீரர்!

சச்சின், கோலி

2023-ம் ஆண்டு கிரிக்கெட் வரலாற்றில் யாருமே செய்யாத ஒரு மாபெரும் உலக சாதனையை படைத்தார் இந்தியாவின் நட்சத்திர வீரர் விராட் கோலி. அவர் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் (49) அடித்திருந்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார். 2023 ஒருநாள் உலககோப்பையின் அரையிறுதிப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக இந்த சாதனையை படைத்த விராட் கோலி, உலக கிரிக்கெட் வரலாற்றில் புதிய சிம்மாசனத்தில் ஏறி அமர்ந்தார்.

ஒருநாள் உலகக்கோப்பையில் 765 ரன்கள்!

virat kohli

2023-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடிய விராட் கோலி புதிய உலக சாதனையை படைத்தார். இதற்குமுன் ஒரு உலகக்கோப்பையில் சச்சின் குவித்த 673 ரன்களே அதிகபட்ச ரன்களாக இருந்தநிலையில், 765 ரன்களை குவித்த விராட் கோலி சச்சின் சாதனையை முறியடித்தார். அதுமட்டுமல்லாமல் ஒரு உலகக்கோப்பையில் 700 ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளார்.

IPL-ல் 7000 ரன்களை குவித்த முதல் வீரர்!

virat kohli

2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பான பேட்டிங் திறனை வெளிப்படுத்திய விராட் கோலி, 6 அரைசதங்கள் உட்பட 2 சதங்களை விளாசி 639 ரன்களை குவித்து அசத்தினார். டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 7000 ரன்களை கடந்த முதல் வீரர் மற்றும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்து அசத்தினார். 229 ஐபிஎல் இன்னிங்ஸ்களில் விளையாடியிருக்கும் விராட் கோலி 50 அரைசதங்கள், 7 சதங்கள் உட்பட 7263 ரன்களை குவித்துள்ளார்.