virat kohli cricinfo
கிரிக்கெட்

அதிவேகமாக 27,000 ரன்கள்.. சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடித்தார் விராட் கோலி!

சர்வதேச கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 27,000 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார் விராட் கோலி!

Rishan Vengai

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இரண்டு அணிகளும் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி, 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.

ind vs ban test

அதனைத்தொடர்ந்து நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்தபோது மழை குறுக்கிட்டது. முதல்நாளில் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட நிலையில், இரண்டாவது மற்றும் 3வது நாள் ஆட்டங்கள் மைதானத்தின் ஈரப்பதம் காரணமாக நடத்தப்படவில்லை.

ஜெய்ஸ்வால்

இந்நிலையில் 4வது நாளான இன்று ஆட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்றுவருகிறது. முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 233 ரன்கள் அடித்த நிலையில், இந்தியா 9 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் முன்னிலையுடன் 285 ரன்களுக்கு டிக்ளார் செய்தது.

27,000 ரன்கள் குவித்து விராட் கோலி உலகசாதனை..

வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 35 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 27,000 ரன்களை கடந்து புதிய மைல்கல் சாதனை படைத்தார்.

virat kohli

இதற்குமுன்னர் சச்சின் டெண்டுல்கர் 623 இன்னிங்ஸ்களில் 27,000 ரன்களை கடந்ததே உலக சாதனையாக இருந்த நிலையில், 594 இன்னிங்ஸ்களில் விளையாடி விராட் கோலி முறியடித்துள்ளார்.

sachin and virat

அதுமட்டுமில்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் சச்சினுக்கு பிறகு 27,000 ரன்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர், சச்சின், ரிக்கிபாண்டிங், குமார் சங்ககராவிற்கு பிறகு 4வது உலகவீரர் என்ற சாதனையை படைத்து அசத்தியுள்ளார்.

நான்காம் நாள் முடிவில் வங்கதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 26 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்துள்ளது.