கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய விராட் கோலி 60 பந்தில் 105 ரன்கள் குவித்தார்.
இது டி20 கிரிக்கெட்டில் அவருடைய 10வது சதமாகும், இந்திய வீரர் ஒருவர் 10 டி20 சதங்கள் அடிப்பது இதுவே முதல்முறை.
105 ரன்கள் அடித்த விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக (409 இன்னிங்ஸ்கள்) 14000 ரன்களை கடந்த வீரர் என்ற வரலாறு படைத்தார். முதலிடத்தில் இருந்த கிரிஸ்கெய்லை (423 இன்னிங்ஸ்கள்) பின்னுக்கு தள்ளினார்.
ஐபிஎல்லில் 9 சதங்களை பதிவுசெய்து முதலிடத்தில் நீடிக்கிறார் விராட் கோலி, இரண்டாவது இடத்தில் 7 சதங்களுடன் ஜோஸ் பட்லர் நீடிக்கிறார்.
279 போட்டிகளில் விளையாடி அதிக ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய வீரராக மாறினார் கோலி, இரண்டாவது இடத்தில் 278 போட்டிகளுடன் ரோகித் சர்மா நீடிக்கிறார்.
நேற்று ஆட்டநாயகனாக தன்னுடைய 21வது விருதை வென்றார் விராட் கோலி, இது ஐபிஎல்லில் அதிக ஆட்டநாயகன் விருதுகள் வென்ற வீரராக ரோகித் உடன் கோலியை இணைத்தது.
ஐபிஎல்லில் இரண்டுமுறை டக் அவுட்டான பிறகு சதமடித்த முதல் வீரராக சாதனை படைத்தார் விராட் கோலி.
ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான சேஸிங்குகளில் கோலியும் தேவ்தத் படிக்கலும் இணைந்து 10 முறை ஐம்பது ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர், இதுதான் ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாகும்.
நேற்று விளையாடிய 105 ரன்கள் ஆட்டத்தில் விராட் கோலி மிட்விக்கெட் வழியாக 46 ரன்களை சேர்த்தார். இது அவருடைய இன்னிங்ஸ்களில் அதிகபட்சமாகும், இவருக்கு முன் 6 பேட்ஸ்மேன்கள் மட்டுமே அதிகமாக அடித்துள்ளனர்.